• Nov 24 2024

பஸ் கட்டணத்தில் திருத்தமா..? தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பு

Chithra / May 2nd 2024, 2:07 pm
image

 

எரிபொருளின் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதுடன், இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதற்கமைய பேருந்து கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது,

எனினும் கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பேருந்து கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் வலியுறுத்தின.

இந்நிலையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஸ் கட்டணத்தில் திருத்தமா. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பு  எரிபொருளின் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதுடன், இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.இதற்கமைய பேருந்து கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது,எனினும் கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பேருந்து கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் வலியுறுத்தின.இந்நிலையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement