நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடம் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் இதுவரை 1,247 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்தும், கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மழையுடனான காலநிலை- சுகாதார திணைக்களம் எச்சரிக்கை. நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த வருடம் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.அக்டோபர் மாதத்தில் மட்டும் இதுவரை 1,247 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்தும், கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.