• Nov 23 2024

நாட்டில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்..!

Sharmi / Oct 17th 2024, 9:30 am
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினை  தொடர்ந்து ஏற்பட்ட கனமழை வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், புழு நோய் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் கிடைக்கும் உணவுகள் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றும், உணவை சூடாக தயாரிக்க வேண்டும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பெறப்படும் நீரை காய்ச்சி வடிகட்டிய நீராகவோ அல்லது குடிப்பதற்கு மட்டுமே ஏற்ற தண்ணீர் போத்தல்களாகவோ இருக்க வேண்டும்.

மேலும், இந்நாட்களில் உடலில் ஏதேனும் காயம், கீறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சையை நாடவேண்டும் என்பதுடன் வெள்ளம் வந்தால் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் இது குறித்தும் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் தொற்று நோய்கள் பரவும் அபாயம். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினை  தொடர்ந்து ஏற்பட்ட கனமழை வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், புழு நோய் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நாட்களில் கிடைக்கும் உணவுகள் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றும், உணவை சூடாக தயாரிக்க வேண்டும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், பெறப்படும் நீரை காய்ச்சி வடிகட்டிய நீராகவோ அல்லது குடிப்பதற்கு மட்டுமே ஏற்ற தண்ணீர் போத்தல்களாகவோ இருக்க வேண்டும்.மேலும், இந்நாட்களில் உடலில் ஏதேனும் காயம், கீறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சையை நாடவேண்டும் என்பதுடன் வெள்ளம் வந்தால் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் இது குறித்தும் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement