கடந்த மாதம் 12 ஆம் திகதி வீதி விபத்தின் போது உயிரிழந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார்.
அவருடைய நினைவு கூரும்வகையில் அவர் உயிரிழந்த அதே இடத்தில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், தேசபந்து றமேஷ் அமதி அடிகளார் ஆகியோர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வீதி விபத்தில் உயிரிழந்தவருக்கு வெற்றிலைக்கேணியில் நினைவாலயம் கடந்த மாதம் 12 ஆம் திகதி வீதி விபத்தின் போது உயிரிழந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார்.அவருடைய நினைவு கூரும்வகையில் அவர் உயிரிழந்த அதே இடத்தில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், தேசபந்து றமேஷ் அமதி அடிகளார் ஆகியோர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.