• Jan 10 2025

ரோகிங்யா அகதிகள் ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்குண்டவர்கள்; பின்னணியில் இலங்கையர்! பாதுகாப்பு அமைச்சர் தகவல்

Chithra / Jan 7th 2025, 11:44 am
image

 

இலங்கைக்கு படகு மூலம் வந்துள்ள ரோகிங்யா அகதிகள் உண்மையில் வேறு ஒரு பகுதிக்கு செல்லதிட்டமிட்டிருந்தவர்கள், ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்குண்டவர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

இலங்கையின் குடிவரவு கொள்கையை மீறியமைக்காகவே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர், இவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இது ஆட்கடத்தல் தவிர வேறு எதுவுமில்லை. இதன் பின்னணியில் இலங்கையர் ஒருவர் இருக்கவேண்டும்.

இந்த பகுதி ஊடாக இவர்கள் ஐரோப்பாவிற்கு சென்று கொண்டிருந்தார்கள் என சந்தேகம் நிலவுகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அகதிகள் என குறிப்பிடப்பட்டாலே மனிதாபிமான உதவிகளை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ரோகிங்யா அகதிகள் ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்குண்டவர்கள்; பின்னணியில் இலங்கையர் பாதுகாப்பு அமைச்சர் தகவல்  இலங்கைக்கு படகு மூலம் வந்துள்ள ரோகிங்யா அகதிகள் உண்மையில் வேறு ஒரு பகுதிக்கு செல்லதிட்டமிட்டிருந்தவர்கள், ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்குண்டவர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.இலங்கையின் குடிவரவு கொள்கையை மீறியமைக்காகவே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர், இவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.இது ஆட்கடத்தல் தவிர வேறு எதுவுமில்லை. இதன் பின்னணியில் இலங்கையர் ஒருவர் இருக்கவேண்டும்.இந்த பகுதி ஊடாக இவர்கள் ஐரோப்பாவிற்கு சென்று கொண்டிருந்தார்கள் என சந்தேகம் நிலவுகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் அகதிகள் என குறிப்பிடப்பட்டாலே மனிதாபிமான உதவிகளை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement