• Mar 24 2025

சுற்றிவளைக்கப்பட்ட பேஸ்புக் விருந்து; சிறுமிகள் உட்பட 76 பேர் அதிரடியாக கைது

Chithra / Mar 23rd 2025, 8:29 am
image

 

சீதுவ - கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் 15 பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து போதைப்பொருள், கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்கள் 14 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட 12 சிறுமிகள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றிவளைக்கப்பட்ட பேஸ்புக் விருந்து; சிறுமிகள் உட்பட 76 பேர் அதிரடியாக கைது  சீதுவ - கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.சுற்றிவளைப்பில் 15 பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்களிடம் இருந்து போதைப்பொருள், கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்கள் 14 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விருந்தில் கலந்து கொண்ட 12 சிறுமிகள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement