• May 09 2024

ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 1,589,000.00 ரூபாய் நிதி ஜனாதிபதியிடம் கையளிப்பு..!!

Tamil nila / Apr 27th 2024, 6:31 am
image

Advertisement

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசலினால் பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 1,589,000.00 நிதி நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன, கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு பண உதவி வழங்கிய அனைத்து தனவந்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்துடன் இந்நிதி சேகரிப்புக்கு அயராது உழைத்த ஹுதா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் தஃவா குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஹுதா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



  

ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 1,589,000.00 ரூபாய் நிதி ஜனாதிபதியிடம் கையளிப்பு. ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசலினால் பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 1,589,000.00 நிதி நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன, கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு பண உதவி வழங்கிய அனைத்து தனவந்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்துடன் இந்நிதி சேகரிப்புக்கு அயராது உழைத்த ஹுதா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் தஃவா குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஹுதா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement