• Jan 10 2025

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 40,000 ரூபா! - அரசிடம் கோரிக்கை

Chithra / Dec 31st 2024, 8:53 am
image


அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இவ்வருடம் குறைந்தது 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அரசிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதாக கூறிய அவர்,

10,000 ரூபா தொகையை வைத்து இக்காலத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், இம்முறை பண்டிகை முன்பணமாக குறைந்தபட்சம்  40,000 ரூபாவை அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அரச பாடசாலை மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ள 6,000 ரூபா உதவித்தொகையை அரசு அலுவலர்களின் பிள்ளைகள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்குவது போன்று அனைத்து மாணவர்களுக்கும் இந்த தொகையை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுக்கிறார்.

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 40,000 ரூபா - அரசிடம் கோரிக்கை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இவ்வருடம் குறைந்தது 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அரசிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதாக கூறிய அவர்,10,000 ரூபா தொகையை வைத்து இக்காலத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், இம்முறை பண்டிகை முன்பணமாக குறைந்தபட்சம்  40,000 ரூபாவை அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும், அரச பாடசாலை மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ள 6,000 ரூபா உதவித்தொகையை அரசு அலுவலர்களின் பிள்ளைகள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்குவது போன்று அனைத்து மாணவர்களுக்கும் இந்த தொகையை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement