• May 17 2024

அரிசி இறக்குமதியை நிறுத்த வர்த்தமானி வெளியீடு!!

crownson / Dec 9th 2022, 10:45 am
image

Advertisement

அரிசி இறக்குமதியை உடனடியாக இடை நிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ரணில் விக்ரமசிங்க பணிபுரை விடுத்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்எச்எஸ் சமரதுங்க விடம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

8 லட்சம் ஹெக்டேர் நெல் வயல்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் ஏற்கனவே பயிற்செய்கையை ஆரம்பித்துள்ளதாகவும்.

2023 ஆம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் கவலை இல்லை என அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது சில விவசாயிகள் 3 பருவ கால அறுவடைகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் எனவே இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு இவ்வாறு அறிவித்துள்ளார்.

அதன்படி வர்த்தமானியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021 மகா பருவம் தோல்வி அடைந்ததால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

அரிசி இறக்குமதியை நிறுத்த வர்த்தமானி வெளியீடு அரிசி இறக்குமதியை உடனடியாக இடை நிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ரணில் விக்ரமசிங்க பணிபுரை விடுத்துள்ளார்.அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்எச்எஸ் சமரதுங்க விடம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 8 லட்சம் ஹெக்டேர் நெல் வயல்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் ஏற்கனவே பயிற்செய்கையை ஆரம்பித்துள்ளதாகவும்.2023 ஆம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் கவலை இல்லை என அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது சில விவசாயிகள் 3 பருவ கால அறுவடைகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் எனவே இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு இவ்வாறு அறிவித்துள்ளார். அதன்படி வர்த்தமானியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 மகா பருவம் தோல்வி அடைந்ததால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement