• Oct 30 2024

மலையக மக்கள் முன்னணிக்கும் சதாசிவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - விஜயசந்திரன் தெரிவிப்பு!

Tamil nila / Oct 25th 2024, 8:16 pm
image

Advertisement

இன்று மாற்றுக்கட்சியில் இணைந்து கொண்டு மலையக மக்கள் முன்னணியையும் அதன் தலைவரையும் விமர்சிக்கும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தலைவர் நடேசன் சதாசிவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,, 

முன்னாள் நுவரெலியா பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மலையக மக்கள் முன்னணியோடு இருந்து பின்னர் 2015ல் ஜனாதிபதி தேர்தலில்  மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க கட்சி முடிவெடுத்தப்போது அவர் மஹிந்தயோடு இணைந்து கொண்டார்.

அத்தோடு மலையக மக்கள் முன்னணிக்கும் நடேசன் சதாசிவனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் உபதலைவராக பொறுப்பேற்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இவ்வாறு பல கட்சிகளில் அற்ப சலுகைகளுக்காக மாறி மாறி சென்று அரவிந்தகுமாரின் ஆரம்பித்த புதிய கட்சியிலும் தேசிய அமைப்பாளராக இருந்து இன்று அதையும் விட்டுவிட்டு வேறொரு பருவாகால அரசியல் கூட்டணியில் இருந்து விமர்சித்து வருகின்றார்.

மேலும் அவரோடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பாளராக போட்டியிட்ட சிவசாமி பத்மநாதனும் கூட்டு சேர்ந்து விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

காரணம் இவர்களெல்லாம் ஒரு கொள்கையில்லாதவர்கள் அதனால் தான் குரங்கை போல அங்குமிங்கும் தாவி கொண்டிருக்கின்றார்கள் கொள்கை கோட்பாடோடு பயணிக்கும் மலையக மக்கள் முன்னணியோடு தொடர்பில்லாதவர்கள் மலையக மக்கள் முன்னணியை பற்றி விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.


மலையக மக்கள் முன்னணிக்கும் சதாசிவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - விஜயசந்திரன் தெரிவிப்பு இன்று மாற்றுக்கட்சியில் இணைந்து கொண்டு மலையக மக்கள் முன்னணியையும் அதன் தலைவரையும் விமர்சிக்கும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தலைவர் நடேசன் சதாசிவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,, முன்னாள் நுவரெலியா பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மலையக மக்கள் முன்னணியோடு இருந்து பின்னர் 2015ல் ஜனாதிபதி தேர்தலில்  மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க கட்சி முடிவெடுத்தப்போது அவர் மஹிந்தயோடு இணைந்து கொண்டார்.அத்தோடு மலையக மக்கள் முன்னணிக்கும் நடேசன் சதாசிவனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் உபதலைவராக பொறுப்பேற்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இவ்வாறு பல கட்சிகளில் அற்ப சலுகைகளுக்காக மாறி மாறி சென்று அரவிந்தகுமாரின் ஆரம்பித்த புதிய கட்சியிலும் தேசிய அமைப்பாளராக இருந்து இன்று அதையும் விட்டுவிட்டு வேறொரு பருவாகால அரசியல் கூட்டணியில் இருந்து விமர்சித்து வருகின்றார்.மேலும் அவரோடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பாளராக போட்டியிட்ட சிவசாமி பத்மநாதனும் கூட்டு சேர்ந்து விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.காரணம் இவர்களெல்லாம் ஒரு கொள்கையில்லாதவர்கள் அதனால் தான் குரங்கை போல அங்குமிங்கும் தாவி கொண்டிருக்கின்றார்கள் கொள்கை கோட்பாடோடு பயணிக்கும் மலையக மக்கள் முன்னணியோடு தொடர்பில்லாதவர்கள் மலையக மக்கள் முன்னணியை பற்றி விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement