கம்பஹா - பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (30) குளித்துக் கொண்டிருந்தபோது, பலத்த கடல் அலையில் சிக்கி ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவரும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவனொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், 35 வயது பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும், நீரில் மூழ்கி காணாமல் போன 13 வயதுடைய சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பமுனுகம கடற்பகுதியில் சோகம்; சிறுமிகள் உட்பட மூவரின் சடலங்கள் மீட்பு சிறுவனைத் தேடும் பணி தீவிரம் கம்பஹா - பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் நேற்று (30) குளித்துக் கொண்டிருந்தபோது, பலத்த கடல் அலையில் சிக்கி ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயிருந்தனர்.காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவரும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவனொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், 35 வயது பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.எனினும், நீரில் மூழ்கி காணாமல் போன 13 வயதுடைய சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.