• Nov 26 2024

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கையை துரிதப்படுத்த வேண்டும்- சாகல ரத்நாயக்க தெரிவிப்பு..!Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 8:47 pm
image

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக் குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அது தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

காணி உரிமை தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கையை துரிதப்படுத்த வேண்டும்- சாகல ரத்நாயக்க தெரிவிப்பு.Samugammedia அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக் குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அது தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.காணி உரிமை தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement