• Apr 04 2025

ரணிலின் ஜனாதிபதி வேட்பாளர் நிலை தொடர்பில் சாகல வெளியிட்ட தகவல்!

Chithra / Jun 12th 2024, 3:45 pm
image

 

யார் என்ன சொன்னாலும் எதிர்வரும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தாமல் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் கூறியுள்ளார்.

கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் எனவும்,

ஏனைய கட்சிகளிடமும் ஆதரவைப் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வெற்றியடைவதாகவும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் ஜனாதிபதி வேட்பாளர் நிலை தொடர்பில் சாகல வெளியிட்ட தகவல்  யார் என்ன சொன்னாலும் எதிர்வரும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தாமல் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் கூறியுள்ளார்.கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை கூறியுள்ளார்.மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் எனவும்,ஏனைய கட்சிகளிடமும் ஆதரவைப் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வெற்றியடைவதாகவும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement