• May 01 2024

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய சம்பவம் - பக்கச்சார்பற்ற விசாரணைக்கு சஜித் கோரிக்கை!

Chithra / Mar 19th 2024, 1:24 pm
image

Advertisement

 

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி  வழிபாடுகளை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியா- வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜையில் ஈட்டுபட்டிருந்த எட்டு பேரையும் தொல்பொருள் திணைக்களத்தினால் பொய் வழக்கினை போட்டு கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இன்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 

இந்நாட்டில் மத சுதந்திரம் என்பது தெற்கில் உள்ளதைப் போலவே வடக்கில் உள்ள மக்களுக்கும் அதே உரிமை உண்டு. 

இனம், மதம், சாதி பேதங்கள் கடந்து சகலருக்கும் மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. இது ஒருவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளாகும்.

விகாரையாக இருந்தாலும், பள்ளிவாசலாக  இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், எந்த மத வழிபாட்டு இடங்களிலும் சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள உரிமை உள்ளது. 

இந்த மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய சம்பவம் - பக்கச்சார்பற்ற விசாரணைக்கு சஜித் கோரிக்கை  வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி  வழிபாடுகளை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.வவுனியா- வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜையில் ஈட்டுபட்டிருந்த எட்டு பேரையும் தொல்பொருள் திணைக்களத்தினால் பொய் வழக்கினை போட்டு கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இன்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து கருத்து தெரிவித்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்நாட்டில் மத சுதந்திரம் என்பது தெற்கில் உள்ளதைப் போலவே வடக்கில் உள்ள மக்களுக்கும் அதே உரிமை உண்டு. இனம், மதம், சாதி பேதங்கள் கடந்து சகலருக்கும் மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. இது ஒருவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளாகும்.விகாரையாக இருந்தாலும், பள்ளிவாசலாக  இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், எந்த மத வழிபாட்டு இடங்களிலும் சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள உரிமை உள்ளது. இந்த மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement