• Nov 17 2024

தனியார் தொலைக்காட்சியொன்றுடன் சஜித்துக்கு டீல்! தலதா அத்துகோரல பகிரங்கம்

Chithra / Sep 16th 2024, 8:08 am
image

 

சஜித் பிரேமதாஸ தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் என்ன டீல் செய்துள்ளார் என்பதை உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சவால் விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே. எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என்பதை இந்த மேடையில் பகிரங்கப்படுத்துகின்றேன்.

2022 இல் நாட்டை ஏற்ற போது ஐக்கிய மக்கள் சக்தி நகைத்தனர். ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகள் தோற்கும் என்றனர். கடன் கிடைக்காது என்றனர். 6 மாதம் செல்ல முன் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றனர்.

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றனர். தேர்தலை நடத்த மாட்டார் என்றனர். எதிரணி சொன்ன அனைத்துமே இன்று பொய்யாகியுள்ளது.

இயலும் என அனைத்தையும் செய்து காட்டியுள்ளார். எஞ்சிய 50 வீத செயற்பாடுகளையும் நிறைவு செய்வதற்காகத் தான் அவர் ஆட்சியைக் கேட்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் அனைவருக்கும் பதவி கொடுக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. என தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுடன் சஜித்துக்கு டீல் தலதா அத்துகோரல பகிரங்கம்  சஜித் பிரேமதாஸ தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் என்ன டீல் செய்துள்ளார் என்பதை உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சவால் விடுத்துள்ளார்.இரத்தினபுரியில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே. எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என்பதை இந்த மேடையில் பகிரங்கப்படுத்துகின்றேன்.2022 இல் நாட்டை ஏற்ற போது ஐக்கிய மக்கள் சக்தி நகைத்தனர். ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகள் தோற்கும் என்றனர். கடன் கிடைக்காது என்றனர். 6 மாதம் செல்ல முன் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றனர்.ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றனர். தேர்தலை நடத்த மாட்டார் என்றனர். எதிரணி சொன்ன அனைத்துமே இன்று பொய்யாகியுள்ளது.இயலும் என அனைத்தையும் செய்து காட்டியுள்ளார். எஞ்சிய 50 வீத செயற்பாடுகளையும் நிறைவு செய்வதற்காகத் தான் அவர் ஆட்சியைக் கேட்கிறார்.ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் அனைவருக்கும் பதவி கொடுக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement