• Apr 29 2025

சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் விடுத்த கோரிக்கை

Chithra / Feb 12th 2025, 8:45 am
image


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்டுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

சுவிட்சர்லாந்து போலவே இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசின் அதிகபட்ச உதவிகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுவிட்சர்லாந்து தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார். 

கடந்த வார இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்துமாறு தானும் தனது குழுவினரும் தொடர்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ததாக தெரிவித்தார். 

மின் நுகர்வு மற்றும் மின் உற்பத்தியே இடையே ஏற்பட்ட சமநிலையின்மையே இந்த மின் தடைக்கு காரணம் என்றும் விளக்கமளித்தார். 

எனவே, மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

இதற்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். 


சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் விடுத்த கோரிக்கை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்டுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சுவிட்சர்லாந்து போலவே இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசின் அதிகபட்ச உதவிகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுவிட்சர்லாந்து தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார். கடந்த வார இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்துமாறு தானும் தனது குழுவினரும் தொடர்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ததாக தெரிவித்தார். மின் நுகர்வு மற்றும் மின் உற்பத்தியே இடையே ஏற்பட்ட சமநிலையின்மையே இந்த மின் தடைக்கு காரணம் என்றும் விளக்கமளித்தார். எனவே, மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now