• Jul 01 2025

பூமியை தாக்கும் நான்கு சிறுகோள்கள் - பாதிப்பு சிறிய அளவிலா? பெரிய அளவிலா? விஞ்ஞானிகள் ஆராய்வு!

shanuja / Jul 1st 2025, 1:13 pm
image

பூமியை அதிகமாகத் தாக்குவது பெரியகோளா? சிறிய கோளா? என்ற ரீதியில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

 

பல சிறுகோள்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன என்றாலும் அவற்றில் சில கோள்கள் பூமியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  


பூமியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கோள்களாக அபோபிஸ், 2024 ஒய்ஆர்4, டிடிமோஸ் மற்றும் டைமோர்போஸ், சைகே என்ற நான்கு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 

இவற்றுள் முதலாவதாக அபோபிஸ் கோளை எடுத்துக்கொண்டால், குழப்பம் மற்றும் அழிவிற்கான எகிப்திய கடவுளான அபோபிஸின் பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.


இது பூமியைத் தாக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றிய நிலையில் "அடுத்த 100 ஆண்டுகளுக்கு அபோபிஸால் பூமிக்கு எந்த பாதிப்பு ஏற்படும் என்கிற ஆபத்து இல்லை  என்றும் இது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  13 ஆம் திகதி அன்று பூமியைக் கடந்து செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


இரண்டாவதாக 2024 ஒய்ஆர்4 என்ற சிறுகோளானது, 2024 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அளவு 53-67 மீற்றர் இருக்கும் என நாசா கணித்துள்ளது.    ஒரு அதாவது 15 மாடி கட்டடத்தின் அளவு. 2032 இல் பூமியைத் தாக்க சிறிய வாய்ப்புள்ளது. 


டிடிமோஸ் மற்றும் டைமோர்போஸ் என்ற சிறுகோளில் டிடிமோஸ் கிரேக்க மொழியில் இரட்டையர்கள் என்கிற அர்த்தத்தைக் குறிக்கிறது.  டைமோர்போஸ் என்பது அதனைச் சுற்றும் ஒரு சிறிய நிலவு ஆகும். இவை இரண்டுமே பூமிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதில்லை, ஆனால் அவை பூமி மீது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும். 


இறுதியாக சைகே சிறுகோளானது பூமிக்கு மிக தொலைவில் இருக்கிறது. "பிரதான ஆஸ்ட்ராய்ட் பெட்டில் மிகவும் சுவாரஸ்யமான பொருட்களில் ஒன்று" என நாசாவால் விவரிக்கப்படும் சைகே 1852-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஆன்மாவுக்கான கிரேக்க கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சைகே நமக்கு மிகத் தொலைவில் வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையே சூரியனைச் சுற்றி வருகிறது. இது பாறை மற்றும் உலோகங்கள் ஆல் ஆனது என நம்பப்படுகிறது.


மேற்கிறிப்பிட்ட நான்கு கோள்களாலும் பூமிக்கு சிறியளவிலும் பெரியளவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை தாக்கும் நான்கு சிறுகோள்கள் - பாதிப்பு சிறிய அளவிலா பெரிய அளவிலா விஞ்ஞானிகள் ஆராய்வு பூமியை அதிகமாகத் தாக்குவது பெரியகோளா சிறிய கோளா என்ற ரீதியில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.  பல சிறுகோள்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன என்றாலும் அவற்றில் சில கோள்கள் பூமியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  பூமியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கோள்களாக அபோபிஸ், 2024 ஒய்ஆர்4, டிடிமோஸ் மற்றும் டைமோர்போஸ், சைகே என்ற நான்கு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இவற்றுள் முதலாவதாக அபோபிஸ் கோளை எடுத்துக்கொண்டால், குழப்பம் மற்றும் அழிவிற்கான எகிப்திய கடவுளான அபோபிஸின் பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இது பூமியைத் தாக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றிய நிலையில் "அடுத்த 100 ஆண்டுகளுக்கு அபோபிஸால் பூமிக்கு எந்த பாதிப்பு ஏற்படும் என்கிற ஆபத்து இல்லை  என்றும் இது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  13 ஆம் திகதி அன்று பூமியைக் கடந்து செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவதாக 2024 ஒய்ஆர்4 என்ற சிறுகோளானது, 2024 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அளவு 53-67 மீற்றர் இருக்கும் என நாசா கணித்துள்ளது.    ஒரு அதாவது 15 மாடி கட்டடத்தின் அளவு. 2032 இல் பூமியைத் தாக்க சிறிய வாய்ப்புள்ளது. டிடிமோஸ் மற்றும் டைமோர்போஸ் என்ற சிறுகோளில் டிடிமோஸ் கிரேக்க மொழியில் இரட்டையர்கள் என்கிற அர்த்தத்தைக் குறிக்கிறது.  டைமோர்போஸ் என்பது அதனைச் சுற்றும் ஒரு சிறிய நிலவு ஆகும். இவை இரண்டுமே பூமிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதில்லை, ஆனால் அவை பூமி மீது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதியாக சைகே சிறுகோளானது பூமிக்கு மிக தொலைவில் இருக்கிறது. "பிரதான ஆஸ்ட்ராய்ட் பெட்டில் மிகவும் சுவாரஸ்யமான பொருட்களில் ஒன்று" என நாசாவால் விவரிக்கப்படும் சைகே 1852-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஆன்மாவுக்கான கிரேக்க கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சைகே நமக்கு மிகத் தொலைவில் வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையே சூரியனைச் சுற்றி வருகிறது. இது பாறை மற்றும் உலோகங்கள் ஆல் ஆனது என நம்பப்படுகிறது.மேற்கிறிப்பிட்ட நான்கு கோள்களாலும் பூமிக்கு சிறியளவிலும் பெரியளவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement