மின்சார சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(04) தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மின்சார சட்டமூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், அரசியலமைப்புக்கு ஏற்புடையது இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனவே, எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட 12 சட்டங்களில் நாம் பார்க்கும் போது அதில் அரசியலமைப்பு முரண் என ஒரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை.
அதேவேளை, மின்சார சட்டமூலத்தை நாம் உடனடியாக கொண்டுவரப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடமாக பாராளுமன்றத்தில் பல்வேறு தரப்புக்கள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடப்பட்டே கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தோம் எனவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சார சட்டமூலம் குறித்து 12 வழக்குகள் விசாரிக்கப்பட்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, எதிர்வரும் 06 ஆம் திகதி மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அன்றையதினமே வாக்கெடுப்பையும் நடாத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மின்சார சட்டமூலம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ள எதிர்க்கட்சி. உரிய தினத்தில் வாக்கெடுப்பு. சபையில் அமைச்சர் காஞ்சன உறுதி. மின்சார சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(04) தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மின்சார சட்டமூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், அரசியலமைப்புக்கு ஏற்புடையது இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.எனவே, எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட 12 சட்டங்களில் நாம் பார்க்கும் போது அதில் அரசியலமைப்பு முரண் என ஒரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை.அதேவேளை, மின்சார சட்டமூலத்தை நாம் உடனடியாக கொண்டுவரப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடமாக பாராளுமன்றத்தில் பல்வேறு தரப்புக்கள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடப்பட்டே கொண்டுவரப்பட்டது.இது தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தோம் எனவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.மின்சார சட்டமூலம் குறித்து 12 வழக்குகள் விசாரிக்கப்பட்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே, எதிர்வரும் 06 ஆம் திகதி மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அன்றையதினமே வாக்கெடுப்பையும் நடாத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.