திருகோணமலை மாவட்ட உள்ளூர் உற்பத்தி பெண் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி விற்பனை கண்காட்சி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (09) இடம்பெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் இவ் உள்ளூர் உற்பத்தி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட பெண் முயற்சியாளர்களின் கைவினைப் பொருட்கள், மரக்கறி வகைகள், உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
திருகோணமலையிலுள்ள சிறந்த பெண் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்கள் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் பிரசாந்தினி உதயகுமார், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுவர்ணா தீபானி அபிசேகரர் ,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, திருகோணமலை மாவட்ட சிறுவர், மகளீர் பிரிவுக்கான பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் எம்.நளினி உள்ளிட்டோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமலையில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை கண்காட்சி. திருகோணமலை மாவட்ட உள்ளூர் உற்பத்தி பெண் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி விற்பனை கண்காட்சி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (09) இடம்பெற்றது.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் இவ் உள்ளூர் உற்பத்தி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, திருகோணமலை மாவட்ட பெண் முயற்சியாளர்களின் கைவினைப் பொருட்கள், மரக்கறி வகைகள், உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. திருகோணமலையிலுள்ள சிறந்த பெண் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்கள் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.அத்தோடு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் பிரசாந்தினி உதயகுமார், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுவர்ணா தீபானி அபிசேகரர் ,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, திருகோணமலை மாவட்ட சிறுவர், மகளீர் பிரிவுக்கான பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் எம்.நளினி உள்ளிட்டோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.