• Mar 20 2025

சம்மாந்துறை பொலிஸ் - பொதுமக்களுக்கான அறிவித்தல்

Tharmini / Feb 13th 2025, 4:54 pm
image

கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தருமாறு  பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்,  ஆடு  மாடு சட்டவிரோதமாக கடத்தல்,   தங்க நகைகள் தொலைபேசி  திருட்டு,  போன்ற பல்வேறு  சம்பவங்களுடன்   தொடர்புடையவராவார்.

21 வயது மதிக்கத்தக்க "அகில்" என்ற பெயரை உடைய சந்தேக நபர் தொடர்பில் அறிந்தால்   0672 260 222 / 0771319631 ஆகிய இரு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் துவிச்சக்கரவண்டி ஊடாக  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதிக்கு வருகை தந்து அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (EP-VO-2377) எனும் மோட்டார் சைக்கிளை    திருடி சென்றுள்ளதாக  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் இன்றைய தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறித்த  முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனையில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர் மேலதிக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





சம்மாந்துறை பொலிஸ் - பொதுமக்களுக்கான அறிவித்தல் கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தருமாறு  பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்,  ஆடு  மாடு சட்டவிரோதமாக கடத்தல்,   தங்க நகைகள் தொலைபேசி  திருட்டு,  போன்ற பல்வேறு  சம்பவங்களுடன்   தொடர்புடையவராவார்.21 வயது மதிக்கத்தக்க "அகில்" என்ற பெயரை உடைய சந்தேக நபர் தொடர்பில் அறிந்தால்   0672 260 222 / 0771319631 ஆகிய இரு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் துவிச்சக்கரவண்டி ஊடாக  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதிக்கு வருகை தந்து அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (EP-VO-2377) எனும் மோட்டார் சைக்கிளை    திருடி சென்றுள்ளதாக  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் இன்றைய தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேற்குறித்த  முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனையில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர் மேலதிக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement