• Jul 03 2024

சம்பந்தனின் இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு: எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

Chithra / Jul 1st 2024, 1:23 pm
image

Advertisement

 

சம்பந்தனின் இழப்பு இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்திலே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய சம்பந்தனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.

அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலைe;Njன் vd  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இரங்கல் தெரிவித்துள்ளார். 

தனது எக்ஸ் (X) பக்கத்தில் தனது இரங்கலை அவர் வெளியிட்டுள்ளார். 

குறித்த பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


மேலும்  இலங்கையில் நீண்டகாலம் பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீண்டகாலம் தலைமை தாங்கியவருமான இரா.சம்பந்தன் காலமானதை அறிந்து நான் மிகுந்த கவலை அடைகிறேன் என  அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது “X” தளத்தில் மேலும் தெரிவித்த அமைச்சர், 

6 தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு: எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்  சம்பந்தனின் இழப்பு இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்திலே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய சம்பந்தனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலைe;Njன் vd  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (X) பக்கத்தில் தனது இரங்கலை அவர் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது.மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும்  இலங்கையில் நீண்டகாலம் பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீண்டகாலம் தலைமை தாங்கியவருமான இரா.சம்பந்தன் காலமானதை அறிந்து நான் மிகுந்த கவலை அடைகிறேன் என  அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.தனது “X” தளத்தில் மேலும் தெரிவித்த அமைச்சர், 6 தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement