சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பான விசேட தெளிவூட்டும் நிகழ்வானது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தங்கி வாழும் மனநிலையிலிருந்து விலகி சுதந்திரமான பிரஜைகள் சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்பும் பொருட்டு மக்களை வலுவூட்டுவது அத்தியாவசியமானதாகும். மக்களிடத்தேயிருந்து கட்டியெழுப்பப்படுகின்ற பலத்தினை அடிப்படையாகக் கொண்டு ஐவகை வலுவூட்டல் வேலைத் திட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து பிரஜையினையும் தேசிய பொருளாதாரத்தின் பேரபிமானமுள்ள பங்காளர் ஒருவராக உருவாக்குவதே இவ்வேலைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இதன்போது வளவாளர்களாக தமிழ் மொழியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. ஏ. பாக்கியராஜா மற்றும் சிங்கள மொழியில் சமூக பாதுகாப்பு மற்றும் நலம்புரி பணிப்பாளர் எச்.கே.ரணவீர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள், வாழ்வாதார மேம்பாடு, நிதி உள்ளடக்கம், உள சமூக ரீதியான உயிர்ப்பூட்டல்கள், சமூக பாதுகாப்பு, பயிற்சியும் வழிகாட்டல்களும், பயனாளிகளை தெரிவு செய்தல், இலக்குகள், ஒழுங்குமுறை, தரவு சேகரிக்கும் முறை, பங்குதாரர்கள், கண்காணிப்பு, படிநிலைகள், முன்னேற்ற மேலாய்வு போன்ற பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் - விசேட தெளிவூட்டும் நிகழ்வு. சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பான விசேட தெளிவூட்டும் நிகழ்வானது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.தங்கி வாழும் மனநிலையிலிருந்து விலகி சுதந்திரமான பிரஜைகள் சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்பும் பொருட்டு மக்களை வலுவூட்டுவது அத்தியாவசியமானதாகும். மக்களிடத்தேயிருந்து கட்டியெழுப்பப்படுகின்ற பலத்தினை அடிப்படையாகக் கொண்டு ஐவகை வலுவூட்டல் வேலைத் திட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து பிரஜையினையும் தேசிய பொருளாதாரத்தின் பேரபிமானமுள்ள பங்காளர் ஒருவராக உருவாக்குவதே இவ்வேலைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.இதன்போது வளவாளர்களாக தமிழ் மொழியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. ஏ. பாக்கியராஜா மற்றும் சிங்கள மொழியில் சமூக பாதுகாப்பு மற்றும் நலம்புரி பணிப்பாளர் எச்.கே.ரணவீர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள், வாழ்வாதார மேம்பாடு, நிதி உள்ளடக்கம், உள சமூக ரீதியான உயிர்ப்பூட்டல்கள், சமூக பாதுகாப்பு, பயிற்சியும் வழிகாட்டல்களும், பயனாளிகளை தெரிவு செய்தல், இலக்குகள், ஒழுங்குமுறை, தரவு சேகரிக்கும் முறை, பங்குதாரர்கள், கண்காணிப்பு, படிநிலைகள், முன்னேற்ற மேலாய்வு போன்ற பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டன.இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.