• Oct 18 2024

வடமராட்சி கிழக்கில் மீண்டும் மணல் அகழ்வுக்கு அனுமதி - பின்னணியில் யாழ்.அரச அதிகாரிகள்..? samugammedia

Chithra / Apr 22nd 2023, 10:10 am
image

Advertisement

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில், இவ்வருடம் புதிய மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

வடமராட்சி கிழக்கு மிருதங்கணி பிரதேச செயலகத்தில் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப் பகுதி  மக்கள் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்து வரும் நிலையில் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் 08.03.2023  வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு சுமார் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக தகவல் அறியும் சட்ட மூலம் வழங்கப்பட்டு  13 அலுவலக நாட்களில் தகவல் கோருபவருக்கான  பதிலை வழங்க வேண்டும் என  2016 ஆண்டு 12 ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையும் சட்டமூலத்தில் குறித்த பகுதியில் மணல்  அமைதிக்கு அனுமதி வழங்குவது யார்  ஊடாக மணல் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது 2023 பின் புதிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு தாம் அனுமதி வழங்குவதில்லை மற்றும் 2023 பின்னர் புதிய மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது என தகவல் வழங்குவதற்கு ஒரு மாதம் கடந்துள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலக தகவல்  உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மிருதங்கேணி பிரதேச செயலகப் பகுதியில் 2023 தொடக்கத்தில் இருந்து அம்பன்கிழக்கு கிராம அவிருத்தி சங்கத்தின் ஊடாக யாழ் மாவட்டத்துக்கான புதிய மணல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதிகளை புவிச்சரிதவியல் அளவீட்டு சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படுவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்த வேதநாயகன் மற்றும் மகேசன் ஆகியோர் புதிய மணல் அகழ்வு அனுமதிகளை வழங்காது நிறுத்தி இருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ். அரச அதிகாரிகள் ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில் வடமராட்சி கிழக்கு மிருதங்கணி பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெறுவதால் எதிர்காலத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கக் கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் எழுத்து மூலமாக கடிதங்களை வழங்கியும் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே யாழ் மாவட்டத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பெறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் சில வருடங்களில் மிருதங்கேணி பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.



வடமராட்சி கிழக்கில் மீண்டும் மணல் அகழ்வுக்கு அனுமதி - பின்னணியில் யாழ்.அரச அதிகாரிகள். samugammedia யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில், இவ்வருடம் புதிய மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.வடமராட்சி கிழக்கு மிருதங்கணி பிரதேச செயலகத்தில் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப் பகுதி  மக்கள் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்து வரும் நிலையில் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் 08.03.2023  வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு சுமார் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தால் பதில் வழங்கப்பட்டுள்ளது.சாதாரணமாக தகவல் அறியும் சட்ட மூலம் வழங்கப்பட்டு  13 அலுவலக நாட்களில் தகவல் கோருபவருக்கான  பதிலை வழங்க வேண்டும் என  2016 ஆண்டு 12 ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மருதங்கேணி பிரதேச இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையும் சட்டமூலத்தில் குறித்த பகுதியில் மணல்  அமைதிக்கு அனுமதி வழங்குவது யார்  ஊடாக மணல் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது 2023 பின் புதிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு தாம் அனுமதி வழங்குவதில்லை மற்றும் 2023 பின்னர் புதிய மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது என தகவல் வழங்குவதற்கு ஒரு மாதம் கடந்துள்ளது.மருதங்கேணி பிரதேச செயலக தகவல்  உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மிருதங்கேணி பிரதேச செயலகப் பகுதியில் 2023 தொடக்கத்தில் இருந்து அம்பன்கிழக்கு கிராம அவிருத்தி சங்கத்தின் ஊடாக யாழ் மாவட்டத்துக்கான புதிய மணல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான அனுமதிகளை புவிச்சரிதவியல் அளவீட்டு சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படுவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்த வேதநாயகன் மற்றும் மகேசன் ஆகியோர் புதிய மணல் அகழ்வு அனுமதிகளை வழங்காது நிறுத்தி இருந்தனர்.இவ்வாறான நிலையில் யாழ். அரச அதிகாரிகள் ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.இவ்வாறான நிலையில் வடமராட்சி கிழக்கு மிருதங்கணி பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெறுவதால் எதிர்காலத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கக் கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் எழுத்து மூலமாக கடிதங்களை வழங்கியும் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே யாழ் மாவட்டத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பெறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் சில வருடங்களில் மிருதங்கேணி பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement