• Oct 19 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மலையக மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு...!samugammedia

Sharmi / May 10th 2023, 12:40 pm
image

Advertisement

சந்நிதியான் ஆச்சிரமத்தினால்  மலையக மக்களுக்கு 813,000 ரூபா பெறுமதியான  உதவிகள் வழங்கப்பட்டன.

தெமோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு  200,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உயர்தர கற்றல் செயற்பாட்டிற்காக பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த மாணவிக்கு 160,000 ரூபா பெறுமதியான மடிக்கணினி வழங்கப்பட்டது.

நிவ்பர்க் தோட்டம், எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலவிநாயகர் ஆலய கட்டிட பணிக்காக 130,000 நிதி ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.

அன்மையில்  பூனாகலை -  கபரகலை கிராமத்தில் ஏற்பட்ட   மண்சரிவால் பாதிக்கப்பட்ட  75 குடும்பங்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகலை -  கபரகலை கிராமத்தை சேர்ந்த புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள 5 மாணவர்களுக்கு 23,000 ரூபா பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இச் செயற்றிட்ட  உதவிகளை  ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

இவ் உதவித்திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மலையக மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு.samugammedia சந்நிதியான் ஆச்சிரமத்தினால்  மலையக மக்களுக்கு 813,000 ரூபா பெறுமதியான  உதவிகள் வழங்கப்பட்டன.தெமோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு  200,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.உயர்தர கற்றல் செயற்பாட்டிற்காக பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த மாணவிக்கு 160,000 ரூபா பெறுமதியான மடிக்கணினி வழங்கப்பட்டது.நிவ்பர்க் தோட்டம், எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலவிநாயகர் ஆலய கட்டிட பணிக்காக 130,000 நிதி ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.அன்மையில்  பூனாகலை -  கபரகலை கிராமத்தில் ஏற்பட்ட   மண்சரிவால் பாதிக்கப்பட்ட  75 குடும்பங்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.மண்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகலை -  கபரகலை கிராமத்தை சேர்ந்த புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள 5 மாணவர்களுக்கு 23,000 ரூபா பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.இச் செயற்றிட்ட  உதவிகளை  ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இவ் உதவித்திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement