• Jun 29 2024

செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பால புகைப்படம் வைரல்..!

Chithra / Jun 25th 2024, 2:38 pm
image

Advertisement

  

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. 

இந்த புகைப்படம் சமூக  ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.

இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. 

இந்த புகைப்படத்தை சமூக  ஊடகத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டுள்ளது.

ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறன. 

இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீற்றர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.


செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பால புகைப்படம் வைரல்.   விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக  ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக  ஊடகத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டுள்ளது.ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறன. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீற்றர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement