• May 11 2024

சவூதி தலைமையில் உலக பொருளாதார மன்றம்

Tharun / Apr 28th 2024, 12:51 pm
image

Advertisement

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை சவூதி அரேபியா ரியாத் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றன

இந் நிகழ்வானது சவூதி அரேபியா மற்றும் உலக பொருளாதார மன்றத்துக்கிடையே கைச்சாத்தான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக நடைபெறும் ஒன்றாகும்.

இந்த முக்கிய கூட்டத்தில், சர்வதேச நிறுவனங்கள், அரசு சார் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள், கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய உலகளாவிய சவால்களைப் பற்றி இவ்வல்லுனர்கள் கலந்துரையாடி, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துதவதையும், குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை காணும் நோக்கோடு சர்வதேச கூட்டு முயற்சிகள் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கவுள்ளனர்.

சவூதி தலைமையில் உலக பொருளாதார மன்றம் உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை சவூதி அரேபியா ரியாத் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றனஇந் நிகழ்வானது சவூதி அரேபியா மற்றும் உலக பொருளாதார மன்றத்துக்கிடையே கைச்சாத்தான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக நடைபெறும் ஒன்றாகும்.இந்த முக்கிய கூட்டத்தில், சர்வதேச நிறுவனங்கள், அரசு சார் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள், கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய உலகளாவிய சவால்களைப் பற்றி இவ்வல்லுனர்கள் கலந்துரையாடி, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துதவதையும், குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை காணும் நோக்கோடு சர்வதேச கூட்டு முயற்சிகள் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement