• May 13 2024

பாதுகாப்பு அமைச்சர் டிரான் பதவி விலக வேண்டும்..! சட்டத்தரணிகள் எடுத்துள்ள கடும் தீர்மானம்

Chithra / Apr 28th 2024, 1:22 pm
image

Advertisement

  

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை ஒழிப்பது பாவம் இல்லை என புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் ஆட்சேர்ப்பாளர்களிடம் அவர் கூறியதை கண்டித்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான முதலாவது உந்துருளி பிரிவின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளின் அணிவகுப்பில் அமைச்சர் கடந்த வியாழன் அன்று பங்கேற்றார்.

இதன்போது கொலைகள், போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை ஒழிப்பது பாவம் அல்ல என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கூறினார்.

இந்தநிலையில் அமைச்சர் பதவி விலகாவிட்டால், பொது பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக நவரத்ன கூறினார்.

ஜனாதிபதியும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கப்படாவிட்டால் உள்ளூர் மற்றும் சர்வதேச சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சர் டிரான் பதவி விலக வேண்டும். சட்டத்தரணிகள் எடுத்துள்ள கடும் தீர்மானம்   பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.குற்றவாளிகளை ஒழிப்பது பாவம் இல்லை என புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் ஆட்சேர்ப்பாளர்களிடம் அவர் கூறியதை கண்டித்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான முதலாவது உந்துருளி பிரிவின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளின் அணிவகுப்பில் அமைச்சர் கடந்த வியாழன் அன்று பங்கேற்றார்.இதன்போது கொலைகள், போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை ஒழிப்பது பாவம் அல்ல என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கூறினார்.இந்தநிலையில் அமைச்சர் பதவி விலகாவிட்டால், பொது பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக நவரத்ன கூறினார்.ஜனாதிபதியும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கப்படாவிட்டால் உள்ளூர் மற்றும் சர்வதேச சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement