• May 20 2024

வரலாற்றில் முதன்முறையாக விண்வெளிக்கு செல்லும் சவூதி பெண்! SamugamMedia

Chithra / Feb 14th 2023, 12:42 pm
image

Advertisement

சவூதி அரேபியா தனது வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.

சவூதி அரேபியா தனது பாரம்பரிய சட்ட அமைப்பை மாற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக பெண்களை விண்வெளிக்கு செல்ல அனுமதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சவுதி அரேபிய விண்வெளி வீராங்கனை ரயானா பர்னாவி இந்த ஆண்டு நடுப்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் இணைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபிய விண்வெளி வீரர் அலி அல்கானியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அவர் புறப்பட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் “AX2” என்ற விண்வெளிப் பயணத்தில் சேர திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக விண்வெளிப் பயணத்தில் பங்கேற்ற முதல் அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். 2019 ஆம் ஆண்டில், அந்த நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளிப் பணியில் சேர்ந்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக விண்வெளிக்கு செல்லும் சவூதி பெண் SamugamMedia சவூதி அரேபியா தனது வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.சவூதி அரேபியா தனது பாரம்பரிய சட்ட அமைப்பை மாற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக பெண்களை விண்வெளிக்கு செல்ல அனுமதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதன்படி, சவுதி அரேபிய விண்வெளி வீராங்கனை ரயானா பர்னாவி இந்த ஆண்டு நடுப்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் இணைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.சவூதி அரேபிய விண்வெளி வீரர் அலி அல்கானியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அவர் புறப்பட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் “AX2” என்ற விண்வெளிப் பயணத்தில் சேர திட்டமிடப்பட்டுள்ளது.முதன்முறையாக விண்வெளிப் பயணத்தில் பங்கேற்ற முதல் அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். 2019 ஆம் ஆண்டில், அந்த நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளிப் பணியில் சேர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement