புத்தளம் - எருக்கலம்பிட்டி (நாகவில்லு) முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் நேற்று (13) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஹுசைமத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் அ.இ.ம.காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹமம்து பைஸல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹிர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ரதிக உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் கல்வி வலய அதிகாரிகள் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சுமார் 08 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இம் மூன்று மாடி கட்டிடத்தில், சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளைக்கொண்டு இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டம், பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றங்கள் மற்றும் பல இன்னோரன்ன சவால்களைத்தாண்டி கட்டி முடிக்கப்பட்டு வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
8 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடம் திறந்துவைப்பு புத்தளம் - எருக்கலம்பிட்டி (நாகவில்லு) முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் நேற்று (13) திறந்து வைக்கப்பட்டது.பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஹுசைமத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் அ.இ.ம.காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.மேலும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹமம்து பைஸல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹிர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ரதிக உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் கல்வி வலய அதிகாரிகள் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சுமார் 08 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இம் மூன்று மாடி கட்டிடத்தில், சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளைக்கொண்டு இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டம், பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றங்கள் மற்றும் பல இன்னோரன்ன சவால்களைத்தாண்டி கட்டி முடிக்கப்பட்டு வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.குறித்த திறப்பு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.