• Mar 11 2025

ஐயாயிரத்தைக் கடந்த மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் - சபையில் இராதா எம்.பி. சுட்டிக்காட்டு

Chithra / Mar 10th 2025, 12:32 pm
image

 

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய பணிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்த விடயத்தை தாம் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக இன்றைய குழுநிலை விவாதத்தின் போது இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவை தாம் வரவேற்பதாகவும் கூறியிருந்தார். 

பொருளாதார பிரச்சினை காரணமாக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளதாக  தெரிவித்திருந்தார். 

கல்வியமைச்சின் கணக்கெடுப்பிற்கு அமைவாக 50,345 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 2,754 பேர் இடைவிலகியுள்ளதாக தெரிவித்தார்.

ஐயாயிரத்தைக் கடந்த மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் - சபையில் இராதா எம்.பி. சுட்டிக்காட்டு  அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய பணிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை தாம் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக இன்றைய குழுநிலை விவாதத்தின் போது இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவை தாம் வரவேற்பதாகவும் கூறியிருந்தார். பொருளாதார பிரச்சினை காரணமாக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளதாக  தெரிவித்திருந்தார். கல்வியமைச்சின் கணக்கெடுப்பிற்கு அமைவாக 50,345 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 2,754 பேர் இடைவிலகியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement