• Apr 16 2026

இலங்கையில் சுட்டெரிக்கும் சூரியன் - 21 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

Chithra / Apr 16th 2026, 8:27 am
image

இலங்கைக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுப்பதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின்படி, பின்வரும் பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:


வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், மொனராகலை உட்பட மொத்தம் 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' மட்டம் வரை உயரக்கூடும்.


வெப்பம் அதிகரிப்பதன் காரணமாகப் பொதுமக்கள் பின்வரும் உடல்நலச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், வேலை செய்வதாலும் உடல் அதிக சோர்வடையும்.


தொடர்ச்சியான கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது வெப்பத்தினால் ஏற்படும் 

தசைப்பிடிப்புகளுக்கு (Heat Cramps) வழிவகுக்கும்.


வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருக்க வேண்டும். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என  வானிலை ஆய்வு மையம் மற்றும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.


இதேவேளை இன்று கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


சப்ரகமுவ  மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை   வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


இலங்கையில் சுட்டெரிக்கும் சூரியன் - 21 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை இலங்கைக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுப்பதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின்படி, பின்வரும் பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், மொனராகலை உட்பட மொத்தம் 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' மட்டம் வரை உயரக்கூடும்.வெப்பம் அதிகரிப்பதன் காரணமாகப் பொதுமக்கள் பின்வரும் உடல்நலச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், வேலை செய்வதாலும் உடல் அதிக சோர்வடையும்.தொடர்ச்சியான கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புகளுக்கு (Heat Cramps) வழிவகுக்கும்.வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருக்க வேண்டும். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என  வானிலை ஆய்வு மையம் மற்றும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.இதேவேளை இன்று கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.சப்ரகமுவ  மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை   வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement