• Sep 20 2024

தெற்கு இளைஞர்களை வடக்கில் நியமிக்க இரகசிய முயற்சி! SamugamMedia

Tamil nila / Mar 25th 2023, 8:14 pm
image

Advertisement

வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் இளைஞரகள் வேலைவாய்ப்பின்றித் தவிக்க இராணுவத்தின் கீழ் நியமனம் வழங்கிய வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள 427 பேரை வடக்கு மாகாண நிர்வாகங்களிற்குள் உட்புகுத்த இரகசிய நடவடிக்கை இடம்பெறுவதாக தமிழ் அரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.


இது தொடரபில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் விபரம் தெரிவிக்கையில்,


வடக்கு மாகாணத்திலே பி.எல்.3 எனப்படும் சாதாரண தொழிலாளர் வெற்றிடங்கள் 2,275 உள்ளன. இதிலே 1,275  வெற்றிடங்கள் உள்ளூராட்சி சபைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு  உள்ளூராட்சி சபைகளில் காணப்படும்  வெற்றிடங்களை நிரப்பும் அதிகாரம் உள்ளூராட்சி சபைகளிடமே காணப்படுவதனால் அதனை உடன் ஆளுநரின் அனுமதியின பெயரில் நியமிக்க முடியாது என தவிர்க்கப்பட்டுள்ளது.


 இதேநேரம் தற்போது உள்ளூராட்சி சபைகளும் இன்மையால் அந்த வெற்றிடங்களும் என்ன நடக்கும் எனக் கூறமுடயாத நிலை உள்ளதோடு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள 1,275 வெற்றிடம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம் காணப்படுகின்றது.


இவ்வாறு ஆளுநருக்கு காணப்படும் அதகாரத்தை பயன்படுத்தி கோத்தபாய ராயபக்சா ஜனாதிபதயாக இருந்த காலத்தில் இராணுவச் செயலணிகளால் வழங்கப்பட்ட நியமனத்தில் வடக்கில் இருந்த 119 பேருக்கும் கடந்த வாரம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணச் செயலகத்தில் தேர்முகத் தேர்வு இடம்பெற்றபோது 117 பேர் சமூகமளித்துள்ளனர். 


இவர்கள் வடக்கு மாகாண நிர்வாகங்களின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களும் வடமாகாண இளைஞர்கள் எனபதனால மௌனம் காத்தோம். இருந்தபோதும் தற்போது சப்பிரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் இராணுவத்தினர் வழங்கிய நியமனங்கள் மிக அதிகமாக காணப்படுவதனால அங்கே காணப்படும் வெற்றிடங்களை நிரப்பிய பின்பும் மேலதிகமாக காணப்படும் 427 பேரும் வடக்கு மாகாணத்தில் நியமிக்க இரகசிய பணிகள் இடம்பெறுகின்றன.


இது வடக்கு மாகாண இளைஞர்களிற்கு கிடைக்க வேண்டிய உருத்து அதனை தட்டிப பறிக்க நிணைக்கும் ஒருவரே ஆளுநராக இருப்பது வேதனையளிக்கின்றது. 


இதனை வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களிற்கு பெற்றுக் கொடுக்க ஆளுநர் முன் வர வேண்டும் மாறாக வெளியில் இருந்து நியமித்து இங்குள்ள இளைர்களை விரத்திக்கு தள்ளக்கூடாது என்பதோடு மாகாண ஞபையில் உருவாக்கப்பட்ட பிரமாணத்திற்கு அமைய அது வடக்கு மக்களிற்கு உரித்தானதாக இருப்பதனால் எம்மை மீண்டும் நீதிமன்றை நாடும் சூழலிற்கு தள்ள வேண்டாம் என்றார்.


தெற்கு இளைஞர்களை வடக்கில் நியமிக்க இரகசிய முயற்சி SamugamMedia வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் இளைஞரகள் வேலைவாய்ப்பின்றித் தவிக்க இராணுவத்தின் கீழ் நியமனம் வழங்கிய வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள 427 பேரை வடக்கு மாகாண நிர்வாகங்களிற்குள் உட்புகுத்த இரகசிய நடவடிக்கை இடம்பெறுவதாக தமிழ் அரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.இது தொடரபில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் விபரம் தெரிவிக்கையில்,வடக்கு மாகாணத்திலே பி.எல்.3 எனப்படும் சாதாரண தொழிலாளர் வெற்றிடங்கள் 2,275 உள்ளன. இதிலே 1,275  வெற்றிடங்கள் உள்ளூராட்சி சபைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு  உள்ளூராட்சி சபைகளில் காணப்படும்  வெற்றிடங்களை நிரப்பும் அதிகாரம் உள்ளூராட்சி சபைகளிடமே காணப்படுவதனால் அதனை உடன் ஆளுநரின் அனுமதியின பெயரில் நியமிக்க முடியாது என தவிர்க்கப்பட்டுள்ளது. இதேநேரம் தற்போது உள்ளூராட்சி சபைகளும் இன்மையால் அந்த வெற்றிடங்களும் என்ன நடக்கும் எனக் கூறமுடயாத நிலை உள்ளதோடு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள 1,275 வெற்றிடம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம் காணப்படுகின்றது.இவ்வாறு ஆளுநருக்கு காணப்படும் அதகாரத்தை பயன்படுத்தி கோத்தபாய ராயபக்சா ஜனாதிபதயாக இருந்த காலத்தில் இராணுவச் செயலணிகளால் வழங்கப்பட்ட நியமனத்தில் வடக்கில் இருந்த 119 பேருக்கும் கடந்த வாரம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணச் செயலகத்தில் தேர்முகத் தேர்வு இடம்பெற்றபோது 117 பேர் சமூகமளித்துள்ளனர். இவர்கள் வடக்கு மாகாண நிர்வாகங்களின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களும் வடமாகாண இளைஞர்கள் எனபதனால மௌனம் காத்தோம். இருந்தபோதும் தற்போது சப்பிரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் இராணுவத்தினர் வழங்கிய நியமனங்கள் மிக அதிகமாக காணப்படுவதனால அங்கே காணப்படும் வெற்றிடங்களை நிரப்பிய பின்பும் மேலதிகமாக காணப்படும் 427 பேரும் வடக்கு மாகாணத்தில் நியமிக்க இரகசிய பணிகள் இடம்பெறுகின்றன.இது வடக்கு மாகாண இளைஞர்களிற்கு கிடைக்க வேண்டிய உருத்து அதனை தட்டிப பறிக்க நிணைக்கும் ஒருவரே ஆளுநராக இருப்பது வேதனையளிக்கின்றது. இதனை வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களிற்கு பெற்றுக் கொடுக்க ஆளுநர் முன் வர வேண்டும் மாறாக வெளியில் இருந்து நியமித்து இங்குள்ள இளைர்களை விரத்திக்கு தள்ளக்கூடாது என்பதோடு மாகாண ஞபையில் உருவாக்கப்பட்ட பிரமாணத்திற்கு அமைய அது வடக்கு மக்களிற்கு உரித்தானதாக இருப்பதனால் எம்மை மீண்டும் நீதிமன்றை நாடும் சூழலிற்கு தள்ள வேண்டாம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement