• Nov 24 2024

சிங்கள நடிகை பியூமி தொடர்பில் கிடைத்த இரகசிய தகவல் - ஆரம்பிக்கப்பட்ட தீவிர விசாரணை

Chithra / Jul 3rd 2024, 1:14 pm
image


பியூமி ஹன்சமாலி பாதாள உலக தலைவர் ஒருவரின் பணத்தை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை அடக்கி யுக்திய நடவடிக்கையை மக்கள் உணரும் வகையில் ஜூலை 04 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், குறுகிய காலத்தில் பல கோடி ரூபாவை சட்டவிரோதமாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் சம்பாதித்த மாடல் அழகி பியூமி ஹன்சமாலி நடத்தும் அழகுசாதனப் பொருட்கள் அவரது நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இரகசியப் பொலிஸ் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்களை வெளிக் கொண்டுவர குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, பியூமி ஹன்சமாலி நடத்தும் இந்த வியாபாரத்தின் மூலம் வருமான வரி செலுத்துதல் மற்றும் நடத்தப்பட்ட வியாபார கணக்குகள் குறித்தும் அந்த பிரிவு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிங்கள நடிகை பியூமி தொடர்பில் கிடைத்த இரகசிய தகவல் - ஆரம்பிக்கப்பட்ட தீவிர விசாரணை பியூமி ஹன்சமாலி பாதாள உலக தலைவர் ஒருவரின் பணத்தை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை அடக்கி யுக்திய நடவடிக்கையை மக்கள் உணரும் வகையில் ஜூலை 04 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில், குறுகிய காலத்தில் பல கோடி ரூபாவை சட்டவிரோதமாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் சம்பாதித்த மாடல் அழகி பியூமி ஹன்சமாலி நடத்தும் அழகுசாதனப் பொருட்கள் அவரது நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இரகசியப் பொலிஸ் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்களை வெளிக் கொண்டுவர குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதுதவிர, பியூமி ஹன்சமாலி நடத்தும் இந்த வியாபாரத்தின் மூலம் வருமான வரி செலுத்துதல் மற்றும் நடத்தப்பட்ட வியாபார கணக்குகள் குறித்தும் அந்த பிரிவு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement