• Nov 22 2024

கம்பஹா வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசேட நடவடிக்கை...!

Sharmi / Jul 3rd 2024, 1:18 pm
image

கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை கண்காணித்து நீர் வடிகால் தடைகளை கண்டறிய எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்டுத்தாபனத்தின் தலைவர், மேலதிக பொது முகாமையாளர் (அமுலாக்கம்) தலைமையிலான பல உயர் அதிகாரிகள் கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன உத்தியோகத்தர்களுடன் சீதுவைக்கு அருகில் உள்ள நீர்கொழும்பு தடாகத்தின் முகத்துவாரத்திற்கு அருகில் தடுகங் ஓயா மற்றும் அத்தனகலு ஓயா வெள்ளப்பெருக்கை அவதானித்தனர்.

தடுகங் ஓயாவை அண்மித்த ஆற்றின் கரையில் மண் மேடுபடுவதால் சில இடங்கள் குறுகலாக மாறியுள்ளதாகவும், பல்வேறு நீர்வாழ் தாவரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் பல்வேறு அனுமதியற்ற கட்டுமானங்களால் நீர் தடைப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக தலைவர் தெரிவித்தார். இந்த முறைகேடுகளை நீக்கி நீர்வழிப்பாதைகளை அகலப்படுத்துவது மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றி அடைப்புகளை குறைப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய கம்பஹாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற மும்முனை வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டு குறுகிய கால தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணும் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறுகிய கால தீர்வுகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்டத்தில் தடுகங் ஓயா, ஜா எல, மாகிலன்கம  ஓயா, உருவல் ஓயா, குந்திவல கால்வாய், மாபலம் ஓயா, தடுலங்க கால்வாய், தீ எலி ஓயா, அத்தனகலு ஓயா என 09 பிரதான நீர்வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கால்வாய்களில் நீர் வடிகால் இரண்டு முக்கிய புள்ளிகளில் இருந்து நடைபெறுகிறது. அவை ஜா எல  மற்றும் தடுகங் ஓயா ஆகும்.

பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அனுமதியற்ற மற்றும் முறையற்ற கட்டுமானங்கள் காரணமாக அத்தனகல்லு படுகையில் தற்காலிக நீர் பிடிப்பு பகுதிகள் வேகமாக குறைந்து வருகின்றன. அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் பிரதேசங்களில் நீர் வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த மே மாதம், கம்பஹா வெள்ளத்தால் மாவட்டத்தில் உள்ள 19,860 குடும்பங்களில் 80,411 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கம்பஹா வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசேட நடவடிக்கை. கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை கண்காணித்து நீர் வடிகால் தடைகளை கண்டறிய எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார்.அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, கூட்டுத்தாபனத்தின் தலைவர், மேலதிக பொது முகாமையாளர் (அமுலாக்கம்) தலைமையிலான பல உயர் அதிகாரிகள் கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன உத்தியோகத்தர்களுடன் சீதுவைக்கு அருகில் உள்ள நீர்கொழும்பு தடாகத்தின் முகத்துவாரத்திற்கு அருகில் தடுகங் ஓயா மற்றும் அத்தனகலு ஓயா வெள்ளப்பெருக்கை அவதானித்தனர்.தடுகங் ஓயாவை அண்மித்த ஆற்றின் கரையில் மண் மேடுபடுவதால் சில இடங்கள் குறுகலாக மாறியுள்ளதாகவும், பல்வேறு நீர்வாழ் தாவரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் பல்வேறு அனுமதியற்ற கட்டுமானங்களால் நீர் தடைப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக தலைவர் தெரிவித்தார். இந்த முறைகேடுகளை நீக்கி நீர்வழிப்பாதைகளை அகலப்படுத்துவது மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றி அடைப்புகளை குறைப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய கம்பஹாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற மும்முனை வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டு குறுகிய கால தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணும் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறுகிய கால தீர்வுகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடங்கும் என்றும் அவர் கூறினார்.கம்பஹா மாவட்டத்தில் தடுகங் ஓயா, ஜா எல, மாகிலன்கம  ஓயா, உருவல் ஓயா, குந்திவல கால்வாய், மாபலம் ஓயா, தடுலங்க கால்வாய், தீ எலி ஓயா, அத்தனகலு ஓயா என 09 பிரதான நீர்வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கால்வாய்களில் நீர் வடிகால் இரண்டு முக்கிய புள்ளிகளில் இருந்து நடைபெறுகிறது. அவை ஜா எல  மற்றும் தடுகங் ஓயா ஆகும்.பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அனுமதியற்ற மற்றும் முறையற்ற கட்டுமானங்கள் காரணமாக அத்தனகல்லு படுகையில் தற்காலிக நீர் பிடிப்பு பகுதிகள் வேகமாக குறைந்து வருகின்றன. அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் பிரதேசங்களில் நீர் வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த மே மாதம், கம்பஹா வெள்ளத்தால் மாவட்டத்தில் உள்ள 19,860 குடும்பங்களில் 80,411 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement