• Dec 25 2024

பாதுகாப்பு வேலி உடைந்ததில் விபரீதம்; 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன்

Chithra / Dec 23rd 2024, 3:01 pm
image

பதுளை நகரத்தின் மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியின் பாதுகாப்பு வேலி உடைந்தமையால் சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்த சிறுவனொருவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை - பசறை வீதியில் 2 ஆவது மைல்கல் பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். 

காயமடைந்த சிறுவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் ரேஸ்கோர்ஸ் வீதி மைதானத்தில் ரக்பி பயிற்சிக்காக தனது தாயாருடன் காலை  சென்றுள்ள நிலையில், மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள இரும்பு பாதுகாப்பு வேலியில் சாய்ந்தபோது பாதுகாப்பு வேலியானது திடீரென உடைந்து மாணவனுடன் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாதுகாப்பு வேலி உடைந்ததில் விபரீதம்; 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் பதுளை நகரத்தின் மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியின் பாதுகாப்பு வேலி உடைந்தமையால் சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்த சிறுவனொருவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.பதுளை - பசறை வீதியில் 2 ஆவது மைல்கல் பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சிறுவன் ரேஸ்கோர்ஸ் வீதி மைதானத்தில் ரக்பி பயிற்சிக்காக தனது தாயாருடன் காலை  சென்றுள்ள நிலையில், மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள இரும்பு பாதுகாப்பு வேலியில் சாய்ந்தபோது பாதுகாப்பு வேலியானது திடீரென உடைந்து மாணவனுடன் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement