• May 11 2024

பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..! samugammedia

Chithra / Nov 13th 2023, 9:40 am
image

Advertisement

 

இன்றைய தினம் ஜனாதிபதியினால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு, பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த (10) பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், உடை அலுமாரிகள் உட்பட பாராளுமன்றக் கட்டிடம் பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினம் பொதுமக்கள் கலரி விசேட அதிதியினருக்கு மாத்திரம் திறந்திருக்கும். சபாநாயகர் கலரி தூதுவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இன்றைய தினம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய தினம் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருகின்ற வாகனங்கள் உரிய வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தரும்போது சாரதி ஒருவரை மாத்திரம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம். samugammedia  இன்றைய தினம் ஜனாதிபதியினால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு, பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கடந்த (10) பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், உடை அலுமாரிகள் உட்பட பாராளுமன்றக் கட்டிடம் பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினம் பொதுமக்கள் கலரி விசேட அதிதியினருக்கு மாத்திரம் திறந்திருக்கும். சபாநாயகர் கலரி தூதுவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இன்றைய தினம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இன்றைய தினம் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருகின்ற வாகனங்கள் உரிய வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தரும்போது சாரதி ஒருவரை மாத்திரம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement