• Apr 28 2024

யாழ்ப்பாண மரக்கறி சந்தைகளில் ஏற்பட்ட நிலை...! மக்கள் கவலை...! samugammedia

Sharmi / Nov 13th 2023, 9:35 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ். குடாநாட்டு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளநீர்ப் பாதிப்பால் மரக்கறிப் பயிர்கள் அழிவடைந்தமையால் அவற்றின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தற்போது விரதகாலங்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருவதால் மரக்கறி வகைகளுக்கு கிராக்கியும் ஏற்பட்டுள்ளன. 

அதேவேளை யாழ் குடாநாட்டு சந்தைகளில் சகல மரக்கறி வகைகளும் 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மரக்கறி சந்தைகளில் ஏற்பட்ட நிலை. மக்கள் கவலை. samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ். குடாநாட்டு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளநீர்ப் பாதிப்பால் மரக்கறிப் பயிர்கள் அழிவடைந்தமையால் அவற்றின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் தற்போது விரதகாலங்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருவதால் மரக்கறி வகைகளுக்கு கிராக்கியும் ஏற்பட்டுள்ளன. அதேவேளை யாழ் குடாநாட்டு சந்தைகளில் சகல மரக்கறி வகைகளும் 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement