• May 09 2024

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களது கோரிக்கைகளையும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் - விஜயராஜா விஜயரூபன் வேண்டுகோள்

Tharun / Apr 27th 2024, 6:57 pm
image

Advertisement

வடக்கில் விவசாய ஆராய்ச்சி   உத்தியோகத்தர்கள் வெற்றிடமாக உள்ள நிலையில் சேவையினை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே  செய்கின்றனர். இதற்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் எல்லா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும் என வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர்  விஜயராஜா  விஜயரூபன் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம்(27) யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

தற்போது தற்போது விலைகள் விஷம் போன்று ஏறி செல்லும் காலகட்டத்தில் வைத்தியர்கள் மற்றும்  வேறு உத்தியோகத்தர்களுக்கு கொடுக்கும் சலுகை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டும். பல தொழில் சங்கங்களின் போராட்டத்துக்கு அரசாங்கம் இறங்கியுள்ளது. குறிப்பாக வைத்தியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது போராட்டங்களுக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளது. இந்த வகையில் நாங்கள் அதற்கு மாற்று கருத்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு பெற்று கொடுக்கப்பட்ட விமோசனங்கள் வரப்பிரசாதங்கள் எங்களுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதே வேளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெருமளவுக்கு 2012 ஆம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்டு அரசசேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். 

அந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஏனைய உத்தியோகத்தர்கள் போன்று  முறையான சேவை பிராமாண குறிப்பை அரசாங்கம் வழங்கப்படவில்லை. குறைபாட்டோடு  கூடிய சேவைப்பிரமான குறிப்பினை வழங்கியுள்ளது உடனடியாக அதனை மீள் பரிசீலனை செய்து கண்துடைப்புக்கான அரச சேவையாக இதனைக் கருதாமல் மீள் பரிசீலனை செய்து வினைத்திறன் மிக்க சேவையாக இதனை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்னிலங்கையில் கிராமத்துக்கு கிராமம்   விவசாய ஆராய்ச்சி   உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். ஆனால் வடக்கில் விவசாய ஆராய்ச்சி   உத்தியோகத்தர்கள் வெற்றிடமாக உள்ள நிலையில் சேவையினை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே  செய்கின்றனர். இதற்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் எல்லா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களது கோரிக்கைகளையும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் - விஜயராஜா விஜயரூபன் வேண்டுகோள் வடக்கில் விவசாய ஆராய்ச்சி   உத்தியோகத்தர்கள் வெற்றிடமாக உள்ள நிலையில் சேவையினை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே  செய்கின்றனர். இதற்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் எல்லா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும் என வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர்  விஜயராஜா  விஜயரூபன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(27) யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது தற்போது விலைகள் விஷம் போன்று ஏறி செல்லும் காலகட்டத்தில் வைத்தியர்கள் மற்றும்  வேறு உத்தியோகத்தர்களுக்கு கொடுக்கும் சலுகை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டும். பல தொழில் சங்கங்களின் போராட்டத்துக்கு அரசாங்கம் இறங்கியுள்ளது. குறிப்பாக வைத்தியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது போராட்டங்களுக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளது. இந்த வகையில் நாங்கள் அதற்கு மாற்று கருத்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு பெற்று கொடுக்கப்பட்ட விமோசனங்கள் வரப்பிரசாதங்கள் எங்களுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதே வேளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெருமளவுக்கு 2012 ஆம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்டு அரசசேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஏனைய உத்தியோகத்தர்கள் போன்று  முறையான சேவை பிராமாண குறிப்பை அரசாங்கம் வழங்கப்படவில்லை. குறைபாட்டோடு  கூடிய சேவைப்பிரமான குறிப்பினை வழங்கியுள்ளது உடனடியாக அதனை மீள் பரிசீலனை செய்து கண்துடைப்புக்கான அரச சேவையாக இதனைக் கருதாமல் மீள் பரிசீலனை செய்து வினைத்திறன் மிக்க சேவையாக இதனை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை தென்னிலங்கையில் கிராமத்துக்கு கிராமம்   விவசாய ஆராய்ச்சி   உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். ஆனால் வடக்கில் விவசாய ஆராய்ச்சி   உத்தியோகத்தர்கள் வெற்றிடமாக உள்ள நிலையில் சேவையினை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே  செய்கின்றனர். இதற்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் எல்லா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement