• Apr 08 2025

இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம்! - வைகோ கண்டனம்

Chithra / Apr 6th 2025, 3:33 pm
image

 

இந்தியா இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண’ நாமம் வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள் என வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் - வைகோ கண்டனம்  இந்தியா இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண’ நாமம் வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள் என வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement