அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, உலக நாடுகள் பல இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது.
அதன்படி அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ரஷ்ய பிரஜைகள் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் தம் நாட்டு பிரஜைகளிடம் ரஷ்ய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.
மேலும் அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அருகம்பே பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, உலக நாடுகள் பல இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது.அதன்படி அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ரஷ்ய பிரஜைகள் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் தம் நாட்டு பிரஜைகளிடம் ரஷ்ய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. மேலும் அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.இதேவேளை அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.