• Sep 20 2024

தமிழ் வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி!

Tamil nila / Aug 5th 2024, 7:08 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.


இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.


தற்போது இரண்டு  வேட்பாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இறுதியாக அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




தமிழ் வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.தற்போது இரண்டு  வேட்பாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இறுதியாக அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement