• Nov 14 2024

இமயமலைப் பிரகடனத்தின் தேசிய உரையாடலுக்கான பயிலரங்குகள் ஆரம்பம்..!!

Tamil nila / Feb 10th 2024, 10:53 pm
image

இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்கான பயிலரங்குகள் ஆரம்பமாகியுள்ளன. 

இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில், 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிப்பதற்கான ஐந்து பயிலரங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. 

முதலாவது  பயிலரங்கு குருநாகலில் ஆரம்பமாகியுள்ளதோடு இதனையடுத்து கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் பயிலரங்குகள் இடம்பெறவுள்ளன.







மேலும்  குறித்த்மாவட்டங்களின் அருகில் உள்ள மாவட்ட பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.


இந்தப் பயிலரங்குகளின் பங்கேற்பாளர்கள் எதிர்வரும் மாதங்களில் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் உரையாடல்களை எளிதாக்குவதற்கான முக்கிய வளவாளர்களாக இருப்பார்கள். 

அந்த வகையில் குருநாகலில் நேற்றும் இன்றும்  இரு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.


சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து, மாதம்பகம அசாஜி திஸ்ஸ தேரர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், கித்தலாகம ஹேமசார நாயக்க தேரர் மற்றும் சியம்பலகஸ்வௌ விமலசார தேரர் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜா கலந்து கொண்டார். 

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில்  விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும், பங்கேற்றிருந்தனர்.


இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இமயமலைப் பிரகடனத்தின் தேசிய உரையாடலுக்கான பயிலரங்குகள் ஆரம்பம். இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்கான பயிலரங்குகள் ஆரம்பமாகியுள்ளன. இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில், 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிப்பதற்கான ஐந்து பயிலரங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதலாவது  பயிலரங்கு குருநாகலில் ஆரம்பமாகியுள்ளதோடு இதனையடுத்து கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் பயிலரங்குகள் இடம்பெறவுள்ளன.மேலும்  குறித்த்மாவட்டங்களின் அருகில் உள்ள மாவட்ட பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.இந்தப் பயிலரங்குகளின் பங்கேற்பாளர்கள் எதிர்வரும் மாதங்களில் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் உரையாடல்களை எளிதாக்குவதற்கான முக்கிய வளவாளர்களாக இருப்பார்கள். அந்த வகையில் குருநாகலில் நேற்றும் இன்றும்  இரு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து, மாதம்பகம அசாஜி திஸ்ஸ தேரர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், கித்தலாகம ஹேமசார நாயக்க தேரர் மற்றும் சியம்பலகஸ்வௌ விமலசார தேரர் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜா கலந்து கொண்டார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில்  விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும், பங்கேற்றிருந்தனர்.இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement