• Nov 24 2024

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு!

Chithra / Jun 20th 2024, 3:31 pm
image

 

மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி  சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். 

இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான்  15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம்  ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த  பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு  மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி  சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான்  15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம்  ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த  பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர்.குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement