• Jan 22 2025

இலங்கை வரும் பிரிட்டன் மூத்த அதிகாரி; தமிழ் எம்.பிகளுடனும் பேச்சு..!

Sharmi / Jan 20th 2025, 9:02 am
image

பிரிட்டனின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அந்தவகையில், எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சில பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ள அவர், சிவில் அமைப்புக்களின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, வடமாகாண ஆளுநர், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். வர்த்தகர் சங்கத்தினர், சிவில் தரப்பினர் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள அவர், யாழ். பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள தரைக்கீழ்நீர் மற்றும் காலநிலை மாற்றம் சம்பந்தமான நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வரும் பிரிட்டன் மூத்த அதிகாரி; தமிழ் எம்.பிகளுடனும் பேச்சு. பிரிட்டனின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.அந்தவகையில், எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து சில பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ள அவர், சிவில் அமைப்புக்களின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.இதனையடுத்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, வடமாகாண ஆளுநர், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். வர்த்தகர் சங்கத்தினர், சிவில் தரப்பினர் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள அவர், யாழ். பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள தரைக்கீழ்நீர் மற்றும் காலநிலை மாற்றம் சம்பந்தமான நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement