வெள்ள அபாயத்தை எதிர் நோக்கக்கூடிய உயர்தர பரீட்சார்த்திகள் கிண்ணியா பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக, பொதுமக்களுக்கு இன்று(24) விடுத்துள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிஞ்சாகேணி பாலத்தின் நீர்மட்டமும் அதிகரித்து உள்ளது.
இதனால் இந்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்பவர்கள் அவதானமாக செல்வது பாதுகாப்பானது.
கிண்ணியா பிரதேச செயலகத்திலும் பல தாழ்நிலை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பரீட்ச்சாத்திகளின் நலன் கருதி, 24 மணிநேர பாதுகாப்பு சேவை பிரதேச செயலகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரீட்ச்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சனைகள் எதிர்நோக்வோர் முன்கூட்டியே 0779592709 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எந்த நேரமும் அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு, பிரதேச செயலக ஊழியர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தங்களுடைய பிரதேசங்களில், வெள்ள ஆபத்து நிலை ஏற்பட்டால் அது குறித்து, பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவலுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளனர்.
வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ள உயர்தர பரீட்சார்த்திகள் : பிரதேச செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும் - பிரதேச செயலாளர் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், குறிஞ்சாகேணி பாலத்தால் பயணிப்பவர்கள் அவதானமாக இருப்பதோடு. வெள்ள அபாயத்தை எதிர் நோக்கக்கூடிய உயர்தர பரீட்சார்த்திகள் கிண்ணியா பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தெரிவித்துள்ளார்.வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக, பொதுமக்களுக்கு இன்று(24) விடுத்துள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிஞ்சாகேணி பாலத்தின் நீர்மட்டமும் அதிகரித்து உள்ளது. இதனால் இந்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்பவர்கள் அவதானமாக செல்வது பாதுகாப்பானது.கிண்ணியா பிரதேச செயலகத்திலும் பல தாழ்நிலை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், பரீட்ச்சாத்திகளின் நலன் கருதி, 24 மணிநேர பாதுகாப்பு சேவை பிரதேச செயலகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், பரீட்ச்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சனைகள் எதிர்நோக்வோர் முன்கூட்டியே 0779592709 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு, பிரதேச செயலக ஊழியர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.தங்களுடைய பிரதேசங்களில், வெள்ள ஆபத்து நிலை ஏற்பட்டால் அது குறித்து, பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவலுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளனர்.