உலகின் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட, புகழ்பெற்ற ‘சூப்பர் டஸ்கர்” இன யானை கிரெய்க் 54 வயதில் இயற்கை காரணங்களால் காலமானது.
இந்த செய்தி உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரெய்க், தெற்கு கென்யாவில் அமைந்துள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது.
தரையைத் துடைக்கும் அளவுக்கு நீளமான, வளைந்த தந்தங்கள் மற்றும் அமைதியான, கண்ணியமான நடத்தை ஆகியவற்றால் அது உலகப்புகழ் பெற்றது.
சுற்றுலாப் பயணிகளுக்கும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களுக்கும் கிரெய்க் ஒரு கனவு பொருளாக இருந்தது
‘சூப்பர் டஸ்கர்’ யானைகள் என்பது, ஒவ்வொரு தந்தமும் 45 கிலோகிராம் எடையைத் தாண்டிய, அரிய மரபணு பண்பைக் கொண்ட யானைகள் ஆகும்.
இத்தகைய யானைகள் தற்போது மிக வேகமாக குறைந்து வருவதால், கிரெய்க் போன்ற யானைகள் வனவிலங்கு பாதுகாப்பின் அடையாளங்களாக கருதப்பட்டனர்.
பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் குறித்த இழப்புக்கு அஞ்சலி செலுத்தினர்.
தற்செயலாக, கிரெய்க் சமீபத்தில் வெளியான ஓர் இதழின் கருப்பு-வெள்ளை அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
கிரெய்கின் இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கினாலும், அது வாழ்ந்த நீண்ட வாழ்க்கை வனவிலங்கு பாதுகாப்பின் வெற்றியை நிரூபிக்கிறது.
‘சூப்பர் டஸ்கர்’ யானைகள் மறைந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அழிந்து வரும் சூப்பர் டஸ்கர் இன “கிரெய்க்” யானை உலகைவிட்டு பிரிந்த துயரம் உலகின் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட, புகழ்பெற்ற ‘சூப்பர் டஸ்கர்” இன யானை கிரெய்க் 54 வயதில் இயற்கை காரணங்களால் காலமானது.இந்த செய்தி உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிரெய்க், தெற்கு கென்யாவில் அமைந்துள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது.தரையைத் துடைக்கும் அளவுக்கு நீளமான, வளைந்த தந்தங்கள் மற்றும் அமைதியான, கண்ணியமான நடத்தை ஆகியவற்றால் அது உலகப்புகழ் பெற்றது. சுற்றுலாப் பயணிகளுக்கும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களுக்கும் கிரெய்க் ஒரு கனவு பொருளாக இருந்தது‘சூப்பர் டஸ்கர்’ யானைகள் என்பது, ஒவ்வொரு தந்தமும் 45 கிலோகிராம் எடையைத் தாண்டிய, அரிய மரபணு பண்பைக் கொண்ட யானைகள் ஆகும்.இத்தகைய யானைகள் தற்போது மிக வேகமாக குறைந்து வருவதால், கிரெய்க் போன்ற யானைகள் வனவிலங்கு பாதுகாப்பின் அடையாளங்களாக கருதப்பட்டனர்.பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் குறித்த இழப்புக்கு அஞ்சலி செலுத்தினர்.தற்செயலாக, கிரெய்க் சமீபத்தில் வெளியான ஓர் இதழின் கருப்பு-வெள்ளை அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.கிரெய்கின் இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கினாலும், அது வாழ்ந்த நீண்ட வாழ்க்கை வனவிலங்கு பாதுகாப்பின் வெற்றியை நிரூபிக்கிறது.‘சூப்பர் டஸ்கர்’ யானைகள் மறைந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.