சர்வதேச முதியோர் தின வாரத்தை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கோப்பாய் நவ மங்கை நிவாசத்தில் இன்று(03) இடம்பெற்றது.
நவமங்கை நிவாச நிறுவனர் சுவர்ணா நவரட்ணம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்(பதில்) மருதலிங்கம் பிரதீபன் வட மாகாண பிரதம செயலாளர் லக்ஷ்மன் இளங்கோவன் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட முதியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சாறிகள் மற்றும் வேட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது எதிர்வரும் 8 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள முதியோர் தின விழாவுக்காக 25 சாறிகள் பிரதேச செயலக உத்தியோகத்தரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கோப்பாயில் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வு. சர்வதேச முதியோர் தின வாரத்தை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கோப்பாய் நவ மங்கை நிவாசத்தில் இன்று(03) இடம்பெற்றது.நவமங்கை நிவாச நிறுவனர் சுவர்ணா நவரட்ணம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்(பதில்) மருதலிங்கம் பிரதீபன் வட மாகாண பிரதம செயலாளர் லக்ஷ்மன் இளங்கோவன் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட முதியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சாறிகள் மற்றும் வேட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது எதிர்வரும் 8 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள முதியோர் தின விழாவுக்காக 25 சாறிகள் பிரதேச செயலக உத்தியோகத்தரிடம் வழங்கி வைக்கப்பட்டது.