• Nov 28 2024

பாலியல் குற்றச்சாட்டு - பிரேசிலில் அமைச்சர்கள் இருவர் பதவி நீக்கம்

Anaath / Sep 7th 2024, 2:21 pm
image

பிரேசில் நாட்டில்  மனித உரிமைகள் அமைச்சர் சில்வியோ அல்மெய்டா மற்றும் மற்றுமொரு அமைச்சரை பாலியல் குற்றச்சாட்டினால் நேற்றைய  தினம்  அந்த நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு அமைச்சர்களும் பாலியல் குற்றச்சாட்டு ஆணின் அடிப்படையிலே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில்  அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாலியல் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திக் கொண்டு அமைச்சரை பதவியில் வைத்திருப்பது நிலையானது அல்ல என ஜனாதிபதி கருதுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில்   பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில்  சமூக செயற்பாட்டாளரான அல்மெய்டா தெரிவிகையில் விசாரணைக்கு சுதந்திரம் வழங்குவதற்காக தன்னை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி லூலாவிடம் கேட்டுக் கொண்டேன்.

"நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கும், என்னை நிலைநிறுத்துவதாகும் இது எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்... சட்டச் செயல்பாட்டிற்குள் நான் என்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய உண்மைகள் வெளிவரட்டும்," என தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்களில் ஒருவர் இன சமத்துவ அமைச்சர் அனியேல் பிராங்கோ என நாதன்னாட்டு உள்ளோர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டு - பிரேசிலில் அமைச்சர்கள் இருவர் பதவி நீக்கம் பிரேசில் நாட்டில்  மனித உரிமைகள் அமைச்சர் சில்வியோ அல்மெய்டா மற்றும் மற்றுமொரு அமைச்சரை பாலியல் குற்றச்சாட்டினால் நேற்றைய  தினம்  அந்த நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இரு அமைச்சர்களும் பாலியல் குற்றச்சாட்டு ஆணின் அடிப்படையிலே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில்  அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாலியல் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திக் கொண்டு அமைச்சரை பதவியில் வைத்திருப்பது நிலையானது அல்ல என ஜனாதிபதி கருதுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில்   பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இது தொடர்பில்  சமூக செயற்பாட்டாளரான அல்மெய்டா தெரிவிகையில் விசாரணைக்கு சுதந்திரம் வழங்குவதற்காக தன்னை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி லூலாவிடம் கேட்டுக் கொண்டேன்."நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கும், என்னை நிலைநிறுத்துவதாகும் இது எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். சட்டச் செயல்பாட்டிற்குள் நான் என்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய உண்மைகள் வெளிவரட்டும்," என தெரிவித்துள்ளார்.பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்களில் ஒருவர் இன சமத்துவ அமைச்சர் அனியேல் பிராங்கோ என நாதன்னாட்டு உள்ளோர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement