• Sep 30 2026

நாமலுக்கு விடிவா? நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

Chithra / Sep 29th 2026, 1:33 pm
image



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 


நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 


இதன்போது, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை கருத்திற்கொண்டு நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.


‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.


இந்த வழக்குகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.

நாமலுக்கு விடிவா நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை கருத்திற்கொண்டு நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்த வழக்குகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement