இன்று(28) காலை உயிரிழந்த சாந்தனின் ஆன்மா மானுடத்தை மன்னிக்காது எனவும் இந்திய தேசமும் தமிழ்நாடு அரசும் நிரந்தரமாக தலை குனியட்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்
சாந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
36 ஆண்டுகள் மரண தண்டனை, ஆயுள் தண்டனை என முடித்து விடுதலை கிடைத்த பின்பும் மீண்டும் சிறையிலடைத்த இந்திய அதிகார வர்க்கமும் தமிழ்நாடு அரசும் தங்களது குரூர எண்ணம் கொண்ட மரண தண்டனையை நிறைவேற்றிக் கொண்டது.
எங்கள் சாந்தனின் உயிரை குடித்த அதிகார வர்க்கங்களே தயவு செய்து அவன் உடலை இந்த மண்ணில் புதைத்து விடாதீர்கள். வெறி அடங்கா அகோரி நர மனிதர்களான உங்களது வயிற்றில் சமாதியாக்கிக் கொள்ளுங்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாந்தனின் மறைவு. இந்திய தேசமும் தமிழ்நாடு அரசும் நிரந்தரமாக தலை குனியட்டும். கௌதமன் கண்டனம். இன்று(28) காலை உயிரிழந்த சாந்தனின் ஆன்மா மானுடத்தை மன்னிக்காது எனவும் இந்திய தேசமும் தமிழ்நாடு அரசும் நிரந்தரமாக தலை குனியட்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்சாந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,36 ஆண்டுகள் மரண தண்டனை, ஆயுள் தண்டனை என முடித்து விடுதலை கிடைத்த பின்பும் மீண்டும் சிறையிலடைத்த இந்திய அதிகார வர்க்கமும் தமிழ்நாடு அரசும் தங்களது குரூர எண்ணம் கொண்ட மரண தண்டனையை நிறைவேற்றிக் கொண்டது.எங்கள் சாந்தனின் உயிரை குடித்த அதிகார வர்க்கங்களே தயவு செய்து அவன் உடலை இந்த மண்ணில் புதைத்து விடாதீர்கள். வெறி அடங்கா அகோரி நர மனிதர்களான உங்களது வயிற்றில் சமாதியாக்கிக் கொள்ளுங்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.